shadow

12-chennai-cricket-club-600வேட்டிக்கு தடை விதித்த விவகாரம் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று சம்பந்தப்பட்ட கிரிக்கெட் கிளப் மீது கடும் நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணி இன்று சட்டசபையில் உறுதி அளித்தார்.

இன்று காலை சட்டமன்றம் கூடியவுடன் எதிர்க்கட்சிகள், “வேட்டி அணிந்தவர்களுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக பிரச்னையை எழுப்பின. இதற்கு கிரிக்கெட் கிளப் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக, தேமுதிக, காங்கிரஸ் மற்றும் மார்க்கிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தி.மு.க. உறுப்பினர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், வேட்டிக்கு தடை விதித்த நிறுவனம் மீது கடும் நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தி பேசினார்.

தே.மு.தி.க உறுப்பினர் சந்திரகுமார், வேட்டி அணிந்தவர்களுக்கு அனுமதி மறுத்ததை ஒருபோதும்  ஏற்க முடியாது என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் சவுந்திரராஜன் பேசுகையில், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டிக்கு தடை விதித்துள்ளதால் ஆங்கிலேயர் ஆட்சி தொடர்கிறதோ என்ற ஐயம் எழுகிறது என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஆறுமுகம் கூறுகையில், வேட்டிக்கு தடை விதித்தது பண்பாட்டு சீர்குலைவு என்றார்.

எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணி “வேட்டிக்கு தடை விதித்த விவகாரத்தில் சட்ட நிபுணர்களுடன்  கலந்து ஆலோசித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த விவகாரம் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சம்மந்தப்பட்ட கிரிக்கெட் கிளப் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Leave a Reply