மேஷம்
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள்-. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா

ரிஷபம்
நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்-. விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்.
அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், கருநீலம்

மிதுனம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார்.
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிரே

கடகம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தில் கொஞ்சம் சலசலப்புகள் வரும். சிலர் உங்களை தாழ்த்துப் பேசினாலும், விமர்சித்தாலும் கலங்கிக் கொண்டிருக்காதீர்கள். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, மஞ்சள்

சிம்மம்
சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.
அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, இளஞ்சிவப்பு

கன்னி
கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். பிரபலங்களின் நட்பு கிட்டும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் புகழ் பெற்ற பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள்.
அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில் நீலம், ப்ரவுன்

துலாம்
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றவீர்கள். மகிழ்ச்சிகரமான செய்தி கேட்பீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் , பச்சை

விருச்சிகம்
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், க்ரீம் வெள்ளை

தனுசு
தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். நிலம், வீடு வாங்குவது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தா பச்சை, மஞ்சள்

மகரம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், வெள்ள

கும்பம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து விலகும். புது முதலீடுகளை தவிர்க்கவும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டம். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : நீலம், பிங்க்

மீனம்
எடுத்த வேலையை முழுமையாக முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் மோதல்கள் வேண்டாமே. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நெருக்கடிகள் வந்து நீங்கும்.
அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : பச்சை, ரோஸ்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *