மேஷம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.
அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : பச்சை, மஞ்சள்

 ரிஷபம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.
அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், வெள்ளை

 மிதுனம்
எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : நீலம், ரோஸ்

 கடகம்
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர் வருகை உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : பச்சை, ரோஸ்

 சிம்மம்
குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, வெள்ளை
 
 கன்னி
எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : சிவப்பு, சாம்பல் நிறம்

துலாம்
சவாலில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். அரசால் ஆதாயம் உண்டு. சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்-. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள்.
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், வைலெட்
 
விருச்சிகம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். நட்பு வட்டம் விரியும். முன்கோபம் குறையும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிட்டும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா

தனுசு
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்கள்.
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : சிவப்பு, பிங்க்
 
மகரம்
குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.
அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், வெளிர் நீலம்

கும்பம்
திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : சாம்பல் நிறம், சிவப்பு
 
மீனம்
பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். வி. ஐ. பிகளின் நட்பு கிட்டும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிளிப்பச்சை

Leave a Reply