மேஷம்
புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வயிற்றுவலி, வாயுக்கோளாறு நீங்கும். தெளிவான முடிவுகளை எடுத்து அருகிலிருப்பவர்களை அசத்துவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். மாணவர்களின் நினைவாற்றல் பெருகும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர்சிவப்பு, கிரே

ரிஷபம்
காலைப்பொழுதிலிருந்தே மகிழ்ச்சியுடன் காணப்படுவீகள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசுக் காரியங்களில் வெற்றியுண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை முறியடிப்பீர்கள். தந்தைவழிச் சொத்திலிருந்தப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்த்துவிட்டு சேமிக்கத்தொடங்குவீர்கள். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், வைலெட்

மிதுனம்
வெகுநாட்களாக மனதளவில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு இன்று முடிவுகட்டுவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெறுகும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் உடல்நிலை சீராக இருக்கும். வாகனச்செலவு நீங்கும். உத்தியோகத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கோபம் குறையும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா

கடகம்
இன்றையதினம் மனநிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அனுசரித்துப் போவீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு. உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை அதிரடியாக செயல்பட்டு வசூலிப்பீர்கள். தாயாரின் உடல்நிலை சீராக அமையும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, பிங்க்

சிம்மம்
ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. மறைமுகப் போட்டிகளுக்கு பதிலடி தருவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதயம் உண்டு. விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு. பிரபங்களின் உதவி கிடைக்கும். கண் எரிச்சல், தூக்கமின்மை நீங்கும். அக்கம் – பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், வெளிர் நீலம்

கன்னி
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, இளஞ்சிவப்பு

துலாம்
சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். யாருக்கும் உறுதி மொழி தர வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிளிப்பச்சை

விருச்சிகம்
சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவதன் மூலம் காரியங்கள் வெற்றியடையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். பிராத்தனைகளை நிறைவேற்றுகள். கன்னிப்பெண்களுக்கு உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ஊதா

தனுசு
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் ஒத்துழைப்பார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதர வகையில் நன்மை கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், வெளீர்நீலம்

மகரம்
வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மகிழ்ச்சி கிட்டும். தாயாரின் உடல் நிலை சீராகும். கணவன் – மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர்செய்வீர்கள். அரசாங்க காரியங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, வைலெட்

கும்பம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, நீலம்

மீனம்
மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டுமென நினைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரே

Leave a Reply