மேஷம்
மனக்குழப்பங்கள் நீங்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கோபம் குறையும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். கன்னிப்பெண்களுக்கு காதல் கைகூடும். வயிற்றுவலி, கனவுத்தொல்லை நீங்கும். மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, நீலம்

ரிஷபம்
இன்றையதினம் அதிரடியாக செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பணவரவு உண்டு. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசாங்க காரியங்களில் வெற்றியுண்டு. மாணவர்களின் சிந்தனைத்திறன் அதிகரிக்கும். தாயின் உடல்நிலை சீராகும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, மயில் நீலம்

மிதுனம்
இரண்டுமூன்று நாட்களாக முடியாமல் இழுத்தடித்த காரியங்களெல்லாம் இனி முடிவுக்கு வரும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் நீண்டாநாள் கோரிக்கைகளை பூர்த்தி செய்வீர்கள். அரசாங்க வேலைகளில் அனுகூலமான நிலைக் காணப்படும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், மஞ்சள்

கடகம்
இன்றையதினம் மன உளைச்சல் நீங்கும். கலகலப்பாக சிரித்துப்பேசும் சூழல் அமையும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மகிழ்ச்சியுண்டு. நட்பு வட்டம் விரியும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். மாணவர்களின் நினைவாற்றல் பெருகும். முன்கோபம் விலகும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், ப்ரவுன்

சிம்மம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், இளஞ்சிவப்பு

கன்னி
எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாக முடியும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

துலாம்
இன்றையதினம் ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். வியாபார ரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். தாயின் உடல் நிலை சீராகும். நண்பர்கள், உறவினர்களின் உதவி கிட்டும். மனக்குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சகோதரவகையில் மகிழ்ச்சியுண்டு. அக்கம் – பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பிங்க்

விருச்சிகம்
இன்றையதினம் சோர்வு, அலைச்சல் நீங்கி ஆனந்தமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவு கிட்டும். உறவினர்களால் பாராட்டப்படுவீர்கள். கன்னிப்பெண்களுக்கு கல்யாணப்பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் தரும். பயணங்களால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ப்ரவுன்

தனுசு
நீண்ட நாள் எண்ணங்கள் பூர்த்தியாக முயற்சிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறைக் காட்டுவீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் மன உளைச்சல் நீங்கும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவு உண்டு. வாகனத்தை சீர்செய்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை

மகரம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்

கும்பம்
இன்றைய தினம் மன உறுதியுடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியுண்டு. குழந்தைகளின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். தந்தையின் உடல் நிலை சீராகும். வியாபாத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். மாணவர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஆரஞ்சு

மீனம்
புது முயற்சிகள் வெற்றி தரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு உண்டு. கணவன் – மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். முன்கோபம் விலகும். பிரியமானவர்களைச் சந்தித்து பொழுதைக் கழிப்பீர்கள். அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மஞ்சள்

Leave a Reply