மேஷம்
இரண்டு மூன்று நாட்களாக தடைபட்டுவந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். சொந்தம்-பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், இளஞ்சிவப்பு

ரிஷபம்
மாலை 3. 00 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று வருந்துவீர்கள். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் வரும். உத்தியோகத்தில் விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். மாலை பொழுதிலிருந்து மகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

மிதுனம்
கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். மாலை 3 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்எச்சரிக்கையுடன் செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பிங்க்

கடகம்
வீண்செலவுகளை தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்பவருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் தேவையறிந்து உதவுவீர்கள். முன் கோபம் குறையும். தந்தையின் உடல் நிலை சீராகும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ப்ரவுன்

சிம்மம்
இன்றைய தினம் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். கையில் காசு பணம் தேவையான அளவு இருக்கும். சகோதரவகையில் மகிழ்ச்சி தங்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை

கன்னி
எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்

துலாம்
திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வேற்று மதத்தினரால் நன்மைக் கிட்டும். முன்கோபம், வீண் அலைச்சல் விலகும். தாயாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஆரஞ்சு

விருச்சிகம்
சவால்கள், ஏமாற்றங்களைத் தாண்டி வெற்றிஅடைவீர்கள். கணவன் – மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். பழைய கடனையை பைசல் செய்யும் அளவிற்கு பணவரவு உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வீண் டென்ஷன், அலைச்சல் நீங்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மஞ்சள்

தனுசு
மாலை 3. 00 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். மாலைப் பொழுதிலிருந்து எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா

மகரம்
கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியால் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். மாலை 3. 00 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், கருநீலம்

கும்பம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொல்லைகள் அகலும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும். எதிர்காலத்திற்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிரே

மீனம்
இன்றையதினம் எதிர்பார்த்த உதவிகள் தக்கசமயத்தில் கிடைக்கும். கையில் காசுபணம் புரளும். பிரியமானவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். குடும்பவருமானத்தை உயர்த்துவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் புது முயற்சிகளால் லாபத்தை பெறுக்குவீர்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, மஞ்சள்

Leave a Reply