மேஷம்
பிரியமானவர்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். தந்தையின் உடல் நலம் சீராகும். கையில் காசு பணம் தேவையான அளவு புரளும். சொந்தம்-பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். நீண்டநாளாக நினைத்திருந்த காரியத்தை இப்பொழுது செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, இளஞ்சிவப்பு

ரிஷபம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெறுகும். கையில் காசுபணம் புரளும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நட்பு வட்டாரம் விரியும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில் நீலம், ப்ரவுன்

மிதுனம்
புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வயிற்றுவலி, வாயுக்கோளாறு நீங்கும். தெளிவான முடிவுகளை எடுத்து அருகிலிருப்பவர்களை அசத்துவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். மாணவர்களின் நினைவாற்றல் பெருகும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, பச்சை

கடகம்
காலைப்பொழுதிலிருந்தே மகிழ்ச்சியுடன் காணப்படுவீகள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசுக் காரியங்களில் வெற்றியுண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை முறியடிப்பீர்கள். தந்தைவழிச் சொத்திலிருந்தப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்த்துவிட்டு சேமிக்கத்தொடங்குவீர்கள். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், க்ரீம் வெள்ளை

சிம்மம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தா பச்சை, மஞ்சள்

கன்னி
எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், வெள்ளை

துலாம்
வெகுநாட்களாக மனதளவில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு இன்று முடிவுகட்டுவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெறுகும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் உடல்நிலை சீராக இருக்கும். வாகனச்செலவு நீங்கும். உத்தியோகத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கோபம் குறையும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில்நீலம், பிங்க்

விருச்சிகம்
இன்றையதினம் மனநிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அனுசரித்துப் போவீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு. உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை அதிரடியாக செயல்பட்டு வசூலிப்பீர்கள். தாயாரின் உடல்நிலை சீராக அமையும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ்பச்சை, ரோஸ்

தனுசு
ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. மறைமுகப் போட்டிகளுக்கு பதிலடி தருவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதயம் உண்டு. விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு. பிரபங்களின் உதவி கிடைக்கும். கண் எரிச்சல், தூக்கமின்மை நீங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

மகரம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர்சிவப்பு, கிரே

கும்பம்
சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவதன் மூலம் காரியங்கள் வெற்றியடையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதவகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். பிராத்தனைகளை நிறைவேற்றுகள். கன்னிப்பெண்களுக்கு உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், வைலெட்

மீனம்
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் ஒத்துழைப்பார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். முகப் பொலிவு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதர வகையில் நன்மை கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா

Leave a Reply