மேஷம்

திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வாகனத்தில் செல்லும் போதும், சாலைகளை கடக்கும் போதும் நிதானம் அவசியம். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

ரிஷபம்
மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டுமென நினைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பிங்க்

மிதுனம்
சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ப்ரவுன்

கடகம்
கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். உயரதிகாரி ஆதரிப்பார். நட்பு வட்டம் விரியும். தாழ்வு மனப்பான்மை நீங்கும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை

சிம்மம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். யாரையும் தூக்கி எரிந்துப் பேசாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்

கன்னி
பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் விலகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஆரஞ்சு

துலாம்
குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். சகோதர வகையில் நன்மை கிட்டும். நவீன மின்னலை சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய கடன் தீரும். வெளிவட்டாரத்தில் கௌரவம் கிட்டும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோ கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மஞ்சள்

விருச்சிகம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள். உத்தியோ கத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா

தனுசு
பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். சகோதரர் பாசமழை பொழிவார். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், கருநீலம்

மகரம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் அனுபவம் உள்ள வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிரே

கும்பம்
இன்றைய தினம் புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நல்ல நண்பர்களைச் சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கொடுக்கல் – வாங்கலில் சுமுகமாக நிலைக் காணப்படும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். மாணவர்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, மஞ்சள்

மீனம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமையால் பதட்டமடைவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் புது முடிவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, இளஞ்சிவப்பு

Leave a Reply