மேஷம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெறுகும். கையில் காசுபணம் புரளும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நட்பு வட்டாரம் விரியும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

ரிஷபம்
புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வயிற்றுவலி, வாயுக்கோளாறு நீங்கும். தெளிவான முடிவுகளை எடுத்து அருகிலிருப்பவர்களை அசத்துவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். மாணவர்களின் நினைவாற்றல் பெருகும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

மிதுனம்
காலைப்பொழுதிலிருந்தே மகிழ்ச்சியுடன் காணப்படுவீகள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசுக் காரியங்களில் வெற்றியுண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை முறியடிப்பீர்கள். தந்தைவழிச் சொத்திலிருந்தப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்த்துவிட்டு சேமிக்கத் தொடங்குவீர்கள். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

கடகம்
மதியம் 1.00 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலையிலிருந்து எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

சிம்மம்
கணவன்-மனைவிக்குள் ஆரோக்‌கியமான விவாதங்கள் வந்துப் போகும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு. வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மதியம் 1.00 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் நிதானித்து செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

கன்னி
இன்று மனநிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அனுசரித்துப் போவீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு. உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை அதிரடியாக செயல்பட்டு வசூலிப்பீர்கள். தாயாரின் உடல்நிலை சீராக அமையும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே

துலாம்
ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. மறைமுகப் போட்டிகளுக்கு பதிலடி தருவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதயம் உண்டு. விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு. பிரபங்களின் உதவி கிடைக்கும். கண் எரிச்சல், தூக்கமின்மை நீங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

விருச்சிகம்
சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவதன் மூலம் காரியங்கள் வெற்றியடையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதரவகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். பிராத்தனைகளை நிறைவேற்றுகள். கன்னிப்பெண்களுக்கு உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்

தனுசு
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் ஒத்துழைப்பார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். முகப் பொலிவு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதர வகையில் நன்மை கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்

மகரம்
வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மகிழ்ச்சி கிட்டும். தாயாரின் உடல் நிலை சீராகும். கணவன் -மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர்செய்வீர்கள். அரசாங்க காரியங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்

கும்பம்
மதியம் 1.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்காதீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்

மீனம்
கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. கடனில் ஒரு பகுதியை தீர்க்க முயற்சி செய்வீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். புது முடிவுகளை தவிர்க்கப்பாருங்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். மதியம் 1. 00 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு

Leave a Reply