மேஷம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, ரோஸ்

ரிஷபம்
மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சொந்தம் – பந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். முன்கோபம் விலகும். அரசுப்பணிகள் சுமுகமாக முடியும். வாகனச்செலவு விலகும். வேற்று மதத்தினரால் ஆதரவு கிட்டும். அண்டை வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிரே

மிதுனம்
வியாபாரத்தில் அதிரடி முடிவுகளை எடுத்து போட்டியாளர்களை அதிரச் செய்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சனைகளுக்கு மாற்றுவழி காண்பீர்கள். வெளியூரிலிருந்து நற்செய்திகள் வந்துசேரும். உத்தியோகத்தில் உங்களின் திறமையை மேலதிகாரி புரிந்து கொள்வார்கள். வாகனப்பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

கடகம்
இன்றையதினம் பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்திலுள்ளவர்களிடம் மனம் விட்டுப்பேசுவீர்கள். தாயின் உடல் நிலை சீராக இருக்கும். சகோதர, சகோதரிகளால் உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உதியோகத்தில் பணிகளை விறைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, நீலம்

சிம்மம்
தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். கடனை பைசல் செய்வீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை வாசூலிப்பீர்கள். அம்மாவின் உடல் நிலை சீராக அமையும். பயணங்களால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, மயில் நீலம்

கன்னி
மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கணவன் – மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். பணப்பற்றாக்குறை நீங்கும். அரசுக் கரியங்களில்ம் அனுகூலமான நிலை காணப்படும். பிள்ளைகளின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் பரபரப்பான சூழல் ஏற்படும். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், மஞ்சள்

துலாம்
சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர்கள். மனதிற்குப்பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டு. முன்கோபத்தைத் தவிர்ப்பீர்கள். அக்கம் – பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். வாகனத்திலிருந்து வந்த பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், ப்ரவுன்

விருச்சிகம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் வரும். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். வியாபாரத்தில் முக்கிய பொறுப்புகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காதீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், இளஞ்சிவப்பு

தனுசு
குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை கலந்தாலோசிப்பது நல்லது. அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

மகரம்
இன்றைய தினம் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். உடல் நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். பிரபலங்களைச் சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மகிழ்ச்சியுண்டு. அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பிங்க்

கும்பம்
இரண்டு மூன்று நாட்களாக தடைபட்டுவந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். கணவன் – மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். சொந்தம் – பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ப்ரவுன்

மீனம்
வீண்செலவுகளை தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்பவருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் தேவையறிந்து உதவுவீர்கள். முன் கோபம் குறையும். தந்தையின் உடல் நிலை சீராகும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை

Leave a Reply