மேஷம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். கணவன் – மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், வெளிர் நீலம்

ரிஷபம்
இன்றைய தினம் எதிர்ப்புகள், இழப்புகள், ஏமாற்றங்கள் நீங்கும்.பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும்.கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதைக் கூடும். சகோதரர்கள் உதவுவார்கள்.வியாபரத்தில் பாக்கிகளை விரைந்து வசூலிப்பீர்கள்.வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.பணிகளிலிருந்து வந்த தேக்க நிலை மாறும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, இளஞ்சிவப்பு

மிதுனம்
இன்றைய தினம் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.பிள்ளைகளை நல்வழிபடுத்துவீர்கள்.அவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.வியாபாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.பிரபலங்களின் சந்திப்பு நிகழும்.ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. வீண் செலவுகளைத் தவிர்ப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிளிப்பச்சை

கடகம்
புது எண்ணங்கள் தோன்றும்.விரும்பியப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.பணவரவு உண்டு. கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசுக் காரியங்கள் முழுமையடையும்.வியாபாரத்தில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். பால்ய நண்பர்களைச் சந்திப்பதன் மூலம் மனநிறைவு கிட்டும்.அக்கம் – பக்கம் வீட்டாரின் ஆதரவு உண்டு. அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ஊதா

சிம்மம்
இன்றைய தினம் எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்துபணம் வந்து சமாளிப்பீர்கள். பேச்சித் திறமையால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள்.வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும்.தலைவலி, வாயுக் கோளாறு நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், வெளீர்நீலம்

கன்னி
புது முயற்சிகள் வெற்றியடையும். கணவன் – மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டரிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, வைலெட்

துலாம்
இன்றைய தினம் வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கணவன் – மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சகோதரவகையில் நன்மை பிறக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, நீலம்

விருச்சிகம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தினருடன் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரே

தனுசு
திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் சிலர் உதவிக் கேட்டு தொந்தரவு தருவார்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிளிப் பச்சை

மகரம்
குழப்பத்திலிருந்த நீங்கள் இன்று திட்டவட்டமான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்வீர்கள். சொந்தம் – பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கையில் காசு பணம் தேவையான அளவு இருக்கும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். வாகனச் செலவுகள் குறையும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : வெளிர் மஞ்சள், ப்ரவுன்

கும்பம்
இன்றைய தினம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய கடனை பைசல் செய்யுமளவிற்கு பணவரவு உண்டு. குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாயின் உடல் நிலை சீராகும். சகோதரவகையில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ் பச்சை, வெள்ளை

மீனம்
திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். கையில் காசு பணம் புரளும். தலைச்சுற்றல், வயிற்றுவலி நீங்கும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *