மேஷம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பழைய கடனை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
ரிஷபம்
உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
மிதுனம்
கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

கடகம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்யாதீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

சிம்மம்
சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்

கன்னி
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டு. வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

துலாம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நட்பால் ஆதாயம் உண்டு. பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை

விருச்சிகம்
எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். பால்ய நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

தனுசு
தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்துக் கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்

மகரம்
குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். வராது என்றிருந்த பணம் வரும். நம்பிக்கைக்குரியவர்கள் உதவுவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்

கும்பம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். « அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

மீனம்
எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். வாகனத்தில் செல்லும் போதும், சாலையை கடக்கும் போதும் நிதானம் அவசியம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *