shadow

second hand husbandநீண்ட இடைவெளிக்கு பின்னர் பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா ‘செகண்ட் ஹாண்ட் ஹஸ்பண்ட்’ என்ற படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் தீப்ஷிகா என்ற நடிகை நடிக்கவுள்ளார். இவர் ஷாருக்கான், சல்மான்கான் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிப்பது குறித்து நடிகை தீப்ஷிகா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, “காமெடி படமான செகண்ட் ஹாண்ட் ஹஸ்பண்ட்’ படத்தில் முதல்முறையாக சீனியர் நடிகரான தர்மேந்திராவுக்கு ஜோடியாக நடிக்கின்றேன். எனக்கும் தர்மேந்திராவுக்கு கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

ஏற்கனவே தர்மேந்திராவுடன் நான் பர்சாத் கி ராத் என்ற படத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பது எனக்கு பெருமையாக உள்ளது என்று கூறியுள்ளார்.

Leave a Reply