shadow

விஜய்சேதுபதியின் ‘தர்மதுரை’ சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி தகவல்கள்

dharmaduraiமக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த ‘தர்மதுரை’ திரைப்படம் ரிலீசுக்கு கடந்த வாரமே தயாரான நிலையில் தற்போது இந்த படம் சென்சார் செய்யப்பட்டு ‘யூ’ சர்டிபிகேட் பெற்றுள்ளது. குடும்ப்பாங்கான படத்தை இயக்கிய இயக்குனர் மற்றும் படக்குழுவினர்களை சென்சார் அதிகாரிகள் பாராட்டியதாகவும் தகவ்லகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் ‘தர்மதுரை’ படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் கிடைத்துள்ளதை அடுத்து ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக சற்று முன்னர் அறிவித்துள்ளனர். இந்த படம் இம்மாதம் 19ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது.

நானும் ரெளடிதான், சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி என தொடர்ச்சியாக விஜய்சேதுபதியின் படங்கள் ஹிட்டான நிலையில் இந்த படமும் நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சீனுராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தை பிரபல வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ளார்.

Leave a Reply