shadow

‘தர்மதுரை’ ஆடியோ ரிலீஸ் தேதி

dharmaduraiவிஜய்சேதுபதி நடித்த ‘தர்மதுரை’ வரும் ஆகஸ்ட் மாதத்திலும் அவர் நடித்த மற்றொரு திரைப்படமான ‘ரெக்க’ வரும் செப்டம்பரிலும் ரிலீஸ் ஆகும் என்ற வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் ‘தர்மதுரை’ படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் ஜூலை 27ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் சமூக இணையதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் ஆடியோ ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் டுவிட்டரில் வெளியாகியுள்ளது.

விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கியுள்ளார். பிரபல வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷ் அவர்களின் ஸ்டுடியோ 9′ நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் தமன்னா வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply