shadow

vipதனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான வேலையில்லா பட்டதாரி நல்ல வசூலுடன் தமிழகம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு வசனம் குறித்து ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் படக்குழுவினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தில் தனுஷ் வேலையில்லாமல் பெற்றோர்களிடம் திட்டு வாங்கும் இளைஞர் கேரக்டரில் நடித்துள்ளார். அவர் தந்து தந்தையிடம் பேசும் ஒரு வசனத்தில் தனது தம்பி ஆங்கில பள்ளியில் படித்ததாகதால்தான் ஆங்கிலத்தில் புலமை பெற்று விளங்குவதாகவும், தான் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்ததால் தன்னால் ஆங்கிலத்தில் சரிவர பேச முடியவில்லை என்றும் கூறுவார். இதற்கு ராமகிருஷ்ணா பள்ளி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ராமகிருஷ்ண மிஷன் பள்ளி நாட்டின் 150 இடங்களில் சேவை மனப்பான்மையுடன் நடத்தி வரப்படுகிறது. சீன எல்லையில் அருணாச்சலபிரதேசத்தில் இயங்கும் ஒரே பள்ளி ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி ஒன்றுதான். எங்கள் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மாணவர்கள் நல்ல முறையில் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு படித்த பல மாணவர்கள் தற்போது நல்ல நிலைமையில் உள்ளனர். ஆங்கிலத்திலும் நல்ல அறிவுடன் உள்ளனர். இந்நிலையில் தனுஷ் எங்களது பள்ளியை அவமதிக்கும்படி வசனம் பேசியிருப்பதை கடுமையாக எதிர்க்கின்றோம் என்று இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியுள்ளனர். மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் வேல்ராஜ், நடிகர் தனுஷ் ஆகியோர்களுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் வேல்ராஜ், நடந்த தவறுக்காக ராமகிருஷ்ணா மிஷன் பள்ளிநிர்வாகிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், படத்தில் அவர்கள் குறிப்பிட்ட அந்த வசனத்தை உடனடியாக நீக்குவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply