shadow

தனுஷ்-விஜய்சேதுபதி-ஜீவா இணையும் புதிய படம்?
dhanush
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களை அடுத்து தனுஷூடன் மூன்றாவது முறையாக இணையவுள்ள ‘வடசென்னை’. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் தனுஷூடன் சமந்தா மீண்டும் இணையவுள்ளார். அதுமட்டுமின்றி இந்த படத்தில் மேலும் இரண்டு பிரபல ஹீரோக்கள் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் தனுஷ் கேரக்டருக்கு சமமான ஒரு கேரக்டரில் நடிக்க பிரபல நடிகர் ஜீவாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஜீவா திருநாள், போக்கிரிராஜா, கவலை வேண்டாம், மற்றும் ஜெமினிகணேசன் என நான்கு படங்களில் கமிட் ஆகியுள்ளதாலும், இரண்டாவது ஹீரோ வேடத்தில் நடிக்க ஒப்புக்கொள்வாரா? என்ற சந்தேகம் இருந்து வருகிறது.

இதேபோல் இந்த படத்தில் உள்ள வில்லன் கேரக்டர் ஒன்றுக்கு விஜய்சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக விஜய்சேதுபதியின் படங்கள் தோல்வி அடைந்து வந்த நிலையில் தனுஷ் தயாரித்த ‘நானும் ரவுடிதான்’ படம் விஜய்சேதுபதிக்கு பிரேக் கொடுத்ததால், அந்த நன்றிக்கடனுக்காக இந்த படத்தில் அவர் வில்லன் வேடத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது. அப்போது ஜீவா மற்றும் விஜய்சேதுபதி நடிப்பது குறித்து தெரியவரும்.

Chennai Today News: Dhanush, Vijay Sethupathi and Jiiva joins in a movie

Leave a Reply