shadow

மாமனார் ரஜினியை மிஞ்சினார் மருமகன் தனுஷ்

ரஜினியின் மருமகனும் பிரபல நடிகருமான தனுஷ், டுவிட்டரில் அவ்வப்போது சுவாரஸ்யமான பதிவுகளை செய்து கொண்டு வருவதால் அவருக்கு 4 மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்துள்ளது. இந்த எண்ணிக்கை ரஜினியின் டுவிட்டர் ஃபாலோயர்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் எப்போதும் டுவிட்டரில் ஆக்டிவ் ஆக இருப்பதே இவ்வளவு அதிகமான ஃபாலோயர்கள் இணைய காரணம். அவர் தனது ரசிகர்களுடன் உரையாடுவது, தனது புதிய படம் குறித்த செய்திகள் மற்றும் புகைப்படங்களை பகிர்வது என எப்போதும் சமூக வலைதளம் மூலம் இணைந்தே இருக்கிறார். தற்போது தனுஷின் டுவிட்டரில் 40,01,740 ஃபாலோயர்கள் உள்ளனர்.

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 34 லட்சம், கமல்ஹாசன் 4 லட்சம், விஜய் 8 லட்சம், சூர்யா 15 லட்சம், சிம்பு 16 லட்சம், சிவகார்த்திகேயன் 26 லட்சம் என்ற எண்ணிக்கையில் ஃபாலோயர்களை வைத்துள்ளனர்.

Leave a Reply