இளம் இயக்குநரின் அடுத்த படத்தில் தனுஷ்: ஒரு ஆச்சரிய அறிவிப்பு!

பெரிய நடிகர்கள் தற்போது இளம் இயக்குநர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வருவது கோலிவுட்டில் சாதாரணமாக நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ’துருவங்கள் பதினாறு’ ’நரகாசுரன்’ மற்றும் ’மாபியா’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது

தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிகிறது

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது

Leave a Reply