shadow

img_4000

ராமேஸ்வரம்: ராமாயண காவியத்தில் இடம் பெற்ற ராவணன் தம்பி விபீஷணருக்கு தனுஷ்கோடி அருகே கோதண்ட ராமர் கோயிலில் பட்டாபிஷேக விழா நடந்தது.  இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை விடுவிக்குமாறு ராவணனுக்கு அவரது தம்பி விபீஷணர் அறிவுரை கூறினார். அதை ஏற்க மறுத்து, ஆத்திரமடைந்த ராவணன், விபிஷணரை அவமதித்தார். இதனால் விபிஷணர் அங்கிருந்து வெளியேறி, தனுஷ்கோடி வந்தார். அங்கு சீதையை மீட்பது குறித்து லட்சுமணர், அனுமனுடன் ஸ்ரீராமர் ஆலோனை நடத்திக்கொண்டிருந்தபோது வந்த விபிஷணரை ‘உளவாளி’ என அனுமன் கூறினார். அடைக்கலம் தேடி வருவோரை பாதுகாப்பு தான் தர்மம் எனக்கூறிய ராமர், கடல் நீரை எடுத்து வரும்படி லட்சுமணரிடம் கூறுகிறார். லட்சுமணர் எடுத்த வந்த கடல் நீரை விபிஷணர் தலைமையில் புனித நீராக ஊற்றி, அவரை இலங்கை மன்னராக அறிவித்து, ராமர் பட்டாபிஷேகம் சூட்டினார். இதை நினைவு கூறும் விதமாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் ஆகியோர் தங்க கேடயத்தில் புறப்பாடாகி, கோதண்ட ராமர் கோயிலில் எழுந்தருளினர். அங்கு வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க, கோயில் குருக்கள் ஸ்ரீராம், விபிஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டி வைத்தார். விழாவில் அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ், கோயில் கட்டுமானப்பணி உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகன், கண்காணிப்பாளர் காகரின் ராஜ் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply