shadow

ஆஸ்கார் விருதுக்கு செல்லும் தனுஷின் திரைப்படம்

dhanush-iifa-awardதனுஷ் தயாரித்த ‘விசாரணை’ திரைப்படம் இந்தியாவில் இருந்து ஆஸ்காருக்கு செல்லும் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு கமல்ஹாசனின் ‘ஹே ராம்’ திரைப்படம் ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்ட பின்னர் தமிழ் படம் ஒன்று ஆஸ்காருக்கு செல்வது ‘விசாரணை’ திரைப்படமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ‘விசாரணை’ திரைப்படம் தேசிய விருது மற்றும் சில சர்வதேச விருதுகளை பெற்றுள்ள நிலையில் தற்போது ஆஸ்காருக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதால் இந்த படத்திற்கு சிறந்த வெளிநாட்டிற்கான ஆஸ்கார் விருது கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.

சத்யஜித்ரே, ஏ.ஆர்.ரஹ்மான், ரசூல் பூக்குட்டி ஆகியோர்களின் வரிசையில் தனுஷூம் ஆஸ்கார் பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply