shadow

தனுஷின் ‘விஐபி 2’ திரைப்படம் வெறும் 2 மணி நேரம் மட்டும்தானா?

செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ள ‘விஐபி 2’ திரைப்படம் வரும் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

‘விஐபி 2’ திரைப்படம் 128 நிமிடங்கள் அதாவது இரண்டு மணி நேரம் 8 நிமிடங்கள் மட்டும் ஓடுகிறது. பொதுவாக தமிழ் படங்கள் குறைந்தது 150 நிமிடங்கள் அதாவது இரண்டரை மணி நேரத்தில் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் சுமார் 2 மணி நேரம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். சமீர் தாஹிர் ஒளிப்பதிவாளராகவும், சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

Leave a Reply