shadow

Velai_illa_pattathari_119-small
புதுமுக இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் , அமலாபால் நடித்துள்ள  ‘வேலையில்லா பட்டதாரி’ என்ற திரைப்படம் வரும் 18ம் தேதி வெளியாகிறது.

தனுஷின் சொந்த தயாரிப்பில் உருவான இந்த படத்தை ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்’ வெளியிடுகிறது. அனிருத்தின் பாடல்கள் ஏற்கனவே தமிழகமெங்கும் நல்ல ஹிட்டாகிவிட்டதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் இடையே கடும் போட்டி நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலையில்லா பட்டாதாரி தனுஷின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.  சென்னை, மதுரை, கோவை, உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில் நல்லதொகைக்கு இந்த படம் விற்பனை ஆகியுள்ளதாக விநியோகிஸ்தர்கள் கூறுகின்றனர்.  இதுவரை இல்லாத அளவில் முதல்முதலாக தனுஷ் நடிக்கும் ஒரு திரைப்படம் தமிழகத்தில் சுமார் 400 தியேட்டர்களுக்கும் அதிகமாக ரிலீஸ் ஆகிறது. அமலாபாலின் திருமணத்திற்கு பின்னர் வெளியாகும் முதல்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றியை பொறுத்துதான் மீண்டும் அமலாபால் நடிப்பாரா? என்பது தெரியவரும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *