திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் இன்று காலை திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை சாமி தரிசனம் செய்தார். அவர் விஐபி தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ததாகவும் சாமி தரிசனம் செய்து முடித்த பின்னர் அவருக்கு லட்டு உள்பட சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டதாகவும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்

சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு கோயிலுக்கு வெளியே வந்த தனுஷை அவரது ரசிகர்கள்ழ்ந்துகொண்டு கைகுலுக்கியும் செல்பி எடுத்துக் கொண்டதாலும் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது

இந்த நிலையில் ’ஜெகமே தந்திரம்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது பாலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply