shadow

தனுஷின் அடுத்த படமும் ரெடி: அடுத்தடுத்து ரிலீஸ் செய்ய திட்டம்

இந்த ஆண்டு தனுஷ் நடித்த ’அசுரன்’ மற்றும் ’எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகி இரண்டுமே நல்ல விமர்சனங்களைப் பெற்றது

குறிப்பாக அசுரன் திரைப்படம் வசூல் அளவிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் தனுஷின் முதல் 100 கோடி வசூல் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனுஷ் நடித்து வந்த ’சுருளி என்ற’ திரைப்படம் சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்சன் பணிகள் நடைபெற்று வருவது தெரிந்ததே. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படம் ஜனவரி அல்லது பிப்ரவரியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் தனுஷ் நடித்து வந்த இன்னொரு திரைப்படமான ’பட்டாஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. இதனை அடுத்து பட குழுவினர் நேற்று கேக் வெட்டி படப்பிடிப்பு முடிந்ததை கொண்டாடினர். இந்தப் படமும் ஜனவரி இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்

அடுத்தடுத்து தனுஷ் நடித்த இரண்டு படங்கள் 2020ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே வெளிவர இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் தனுஷ் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *