shadow

தனுஷின் அடுத்தடுத்த ஐந்து படங்களின் தகவல்கள்

ரஜினி, அஜித், விஜய் போன்ற மாஸ் நடிகர்களே ஒரு படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை தொடங்குகின்றனர். ஆனால் தனுஷ் ஒரே நேரத்தில் 5 படங்களில் நடிக்க கமிட்டாகி அவற்றில் மாறி மாறி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தனுஷின் 39 வது படத்தை துரை செந்தில்குமார் ’பட்டாஸ்’ என்ற டைட்டிலில் இயக்கி முடித்திருக்கிறார்

தனுஷின் நாற்பதாவது படத்தை படமான ’சுருளி’ என்ற படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி முடித்திருக்கிறார்

அதேபோல் தனுஷின் 41 வது படத்தை பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். இந்த படத்தை கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளது

தனுஷின் 42வது படத்தை இயக்குனர் ராம்குமார் இயக்க, இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது

தனுஷின் 43வது படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க செல்வராகவன் இயக்கவுள்ளார். இந்த நிலையில் தனுஷின் 44வது படத்தை சன் பிக்சர்ஸ் இயக்க உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் இயக்குனர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஒரு நேரத்தில் ஒரு படத்தில் நடிக்கவே மற்ற நடிகர்கள் திணறிக்கொண்டிருக்கும் போது ஒரே நேரத்தில் 5 படங்களில் தனுஷ் கமிட் ஆகியிருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *