shadow

karthik-dhanush-aneganஇயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிவரும் ‘அனேகன்’ திரைப்படத்தில் தனுஷ், அம்ரியா தஸ்தூர், அதுல் குல்கர்னி, ஆஷீஷ் வித்யார்த்தி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் கார்த்திக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

இந்த படத்தில் தனுஷ் சாலை ஒன்றில் லாரியில் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பது போன்ற ஒரு காட்சியில் தனுஷை காப்பாற்றும் காட்சியில் நடித்துள்ளார் கார்த்திக். சுமார் எட்டு நிமிடங்கள் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்த காட்சியில் ஒரே டேக்கில் நடித்து அசத்தினாராம் கார்த்திக். படக்குழுவினர் அனைவரும் மீண்டும் நீங்கள் முழுநேர நடிகராகிவிடுங்கள் என்று அன்புடன் அவரை கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் கார்த்திக் தனது மகன் கெளதம் கார்த்திக் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க இருக்கின்றாராம்.

கே.வி.ஆனந்தின் அனேகன் படத்தின் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் ஐந்து பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படம் 2015ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1mIde0a” standard=”//www.youtube.com/v/_wJOqqVBjmE?fs=1″ vars=”ytid=_wJOqqVBjmE&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep7066″ /]

Leave a Reply