shadow

தனுஷின் ஹாலிவுட் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

கோலிவுட், பாலிவுட் படங்களில் நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்த தனுஷ் முதன்முதலாக ‘The Extraordinary Journey of the Fakir’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் ‘பண்டிட் குவீன்’ படத்தின் நடித்த சீமா பிஸ்வாஸ் அவர்களும் Berenice Bejo, Erin Moriarty, மற்றும் Barkhad Abdi ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பிரபல ஈரான் இயக்குனர் Marjane Satrapi இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மின்னல் வேகத்தில் படப்பிடிப்புகள் நடைபெற்று தற்போது முழு படப்பிடிப்பும் முடிவுக்குவந்துள்ளது. இந்த தகவலை தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே தனுஷ் நடித்த ‘விஐபி 2’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது. மேலும் தனுஷ் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கி வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வடசென்னை’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகளும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply