ஒரே நாளில் ‘தொடரி’ டப்பிங்கை முடித்து தனுஷ் சாதனை
dhanush
கும்கி’ புகழ் இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்திசுரேஷ் நடித்த ‘தொடரி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் முதல்கட்டமாக தனுஷ் தனது பகுதியின் டப்பிங்கை நேற்று ஒரே நாளில் முடித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

நேற்று காலை ‘தொடரி’ படத்தின் டப்பிங்கை தொடங்குவதாக அறிவித்த தனுஷ், இரவில் டப்பிங்கை முடித்துவிட்டதாக டுவிட்டரில் டுவீட் செய்துள்ளார். தனுஷை தொடர்ந்து அடுத்து கீர்த்தி சுரேஷ் உள்பட இந்த படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளின் டப்பிங் இன்று நடைபெறும் என்று கூறப்படுகிறது.

டெல்லியில் இருந்து சென்னை வரும் ரயிலில் நடைபெறும் விறுவிறுப்பான சம்பவங்கள் கொண்ட இந்த படத்தில் தனுஷ் பேண்ட்ரி ஊழியராகவும் கீர்த்தி சுரேஷ் கேரளா பெண்ணாக நடித்துள்ளார்.

தனுஷ், கீர்த்தி சுரேஷ், கணேஷ் வெங்கட்ராமன், ஹரீஷ் உத்தமன், தம்பி ராமையா, ராதாரவி, கருணாகரன், ஆர்.வி.உதயகுமார், பேராசிரியர் ஞானசம்பந்தம், பட்டிமன்றம் ராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *