தனுஷ் இயக்கும் இரண்டாவது படம் குறித்த தகவல்

கடந்த 2017 ஆம் ஆண்டு தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்த பவர் பாண்டி என்ற திரைப்படம் வெளியானது என்பது தெரிந்ததே

இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பினர்களும் பாராட்டைப் பெற்றதை அடுத்து தனுஷ் இயக்கும் அடுத்த படம் எது என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது

இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிப்பதாக ஒரு படம் அறிவிக்கப்பட்டு அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படம் திடீரென நிறுத்தப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த படம் தொடங்க உள்ளதாகவும் அந்த படம்தான் சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்த படம் என்றும் கூறப்படுகிறது

மேலும் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கும் இந்த படத்தில் ஒரு பெரிய நடிகர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்பதும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த விரிவான அறிவிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply