shadow

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண்-பிரசன்னா நடிக்கும் பவர்பாண்டி

power pandiநடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பலவித அவதாரங்களில் கோலிவுட்டில் வெற்றி பெற்று வந்த தனுஷ் தற்போது அடுத்த அவதாரமாக இயக்குனராகியுள்ளார். இவர் இயக்கவுள்ள முதல் படத்தின் பெயர் பவர்பாண்டி’.

ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் பிரசன்னா, அமலாபால், சாயாசிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‘ஜோக்கர்’ பட இசையமைப்பாளர் சீன் ரோல்டான் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. செல்வராகவன் உள்பட பல பிரபலங்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டனர். தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவின் முதல்பட ஹிரோவும் ராஜ்கிரண்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply