shadow

ஃபோர்ப்ஸ்-இன் டாப் 100 பட்டியல். ரஜினியை முந்திய தனுஷ். கமலை முந்திய ஸ்ருதிஹாசன்.
dhanush
ஒவ்வொரு வருடமும் பிரபல ஆங்கில பத்திரிகையான ஃபோர்ப்ஸ் இந்தியா டாப் 100 திரையுலகினர் பட்டியலை வெளியிடுவது வழக்கம். இந்த வருடம் வெளியான பட்டியலில் அஜீத், விஜய் ஆகிய இரண்டு பெரிய நடிகர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. இது இரு நடிகர்களின் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள சில முன்னணி திரையுலக பிரபலங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

ஷாருக்கான்        – முதல் இடம்
ஏ.ஆர்.ரஹ்மான்    – 14வது இடம்
தனுஷ்        -37வது இடம்
ரஜினிகாந்த்        -46வது இடம்
சந்தானம்        -52வது இடம்
காஜல் அகர்வால்    -58வது இடம்
ஸ்ருதிஹாசன்     -61வது இடம்
கமல்ஹாசன்    -69வது இடம்
சூர்யா        -71வது இடம்
எஸ்.எஸ்.ராஜமெளலி    -72வது இடம்

இந்த பட்டியலில் இருந்து தமிழ் நடிகர்களில் தனுஷ் முதலிடத்தில் இருப்பது மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினியையே முந்தியிருப்பதும், தந்தை கமல்ஹாசனை மகள் ஸ்ருதிஹாசன் முந்தியிருப்பதும் தெரிய வருகிறது.

இந்த பட்டியலில் அஜித்-விஜய் பெயர்கள் இடம்பெறாததன் காரணம் புரியவில்லை.

Leave a Reply