‘விவேகம்’ படத்திற்கு கோலிவுட் திரையுலகினர் பாராட்டு:

தல அஜித் நடித்த ‘விவேகம்’ திரைப்படம் வரும் வியாழன் அன்று வெளியாகவுள்ள நிலையில் இன்று அதிகாலை சரியாக 12.01 மணிக்கு இந்த படத்தின் டிரைலர் திடீரென வெளியானது. அறிவிப்பு இல்லாமல் வெளியானாலும் சமூக வலைத்தளங்களை கட்டுக்குள் வைத்திருக்கும் அஜித் ரசிகர்கள் டிரைலர் வெளிவந்த சில நிமிடங்களில் உலக அளவில் டிரெண்டுக்கு கொண்டு வந்தனர். இந்த நிலையில் இந்த டிரைலருக்கு கோலிவுட் திரையுலகினர் தங்கள்டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்து குறித்து பார்ப்போமா!

தனுஷ்: விவேகம் டிரைலர் அபாரம். அஜித்தின் காட்சிகள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கின்றது. முழு படத்தையும் பார்க்க ஆவலுடன் உள்ளேன்

சிவகார்த்திகேயன்: தல வெறித்தனம், மாஸ் டிரைலர். ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு காத்திருக்கின்றோம்

ஆர்யா: தல தான் எல்லாமே. இயக்குனர் சிவா மற்றும் அவரது குழுவினர்களுக்கு பாராட்டுக்கள்

ரம்யா நம்பீசன்: தீயா இருக்குது விவேகம் டிரைலர். ஹாலிவுட் த்ரில்லர் படத்தை பார்த்தது போன்ற உணர்வு. அஜித், சிவா மற்றும் டீமுக்கு வாழ்த்துக்கள்

வெங்கட்பிரபு: ஒரு முழுமையான ஆக்சன் படம். முதல் நாள் முதல் காட்சிக்காக காத்திருக்கின்றேன்

 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *