shadow

‘கபாலி’ தன்ஷிகாவின் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு

dhanshikaசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு மகளாகவும் நெகட்டிவ் கேரக்டரிலும் நடித்திருப்பதாகவும் கூறப்படும் தன்ஷிகாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சமீபத்தில் அவர் ‘காத்தாடி’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த நிலையில் தற்போது ‘ராணி’ என்ற இன்னொரு படத்தில் நடிக்க தன்ஷிகா ஒப்பந்தமாகியுள்ளார்.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் பூஜை திருவண்ணாமலையில் விரைவில் நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து தன்ஷிகா தன்னுடைய டுவிட்டரில், “Finger crossed. my next project “Rani” Got blessing from illayaraja sir! என்று பதிவு செய்துள்ளார்.

‘கபாலி’ படத்தின் ரிலீசுக்கு பின்னர் தன்ஷிகாவுக்கு இன்னும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என்றும் இப்போதே இன்னும் இரண்டு படங்களில் நடிக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply