shadow

அஜித் 57′ படத்தின் 3வது நாயகி வேடம் தன்ஷிகாவுக்கு கிடைக்குமா?

dhanshikaaதிரையுலகிற்கு வரும் ஒவ்வொரு நடிகைக்க்கும் அஜித், விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது கனவாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆசையை ‘கபாலி’ படத்தில் யோகியாக நடித்த நடிகை தன்ஷிகாவும் தனது டுவிட்டரில் நேற்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

‘கபாலி’ வெற்றி கொடுத்த சந்தோஷத்தில் சமீபத்தில் தன்ஷிகா டுவிட்டரில் தனது ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ஒரு ரசிகர் ‘தல அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அந்த சந்தோஷத்தை எப்படி உணர்வீர்கள் என்று கேட்ட கேள்விக்கு பதில் கூறிய தன்ஷிகா, “அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் இந்த உலகத்திலேயே மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி நான்தான்’ என்று உற்சாகத்துடன் கூறியுள்ளார்.

தற்போது தன்ஷிகா விழித்திரு’, கிட்ணா மற்றும் ‘காத்தாடி’ ஆகிய படங்களில் நடித்து வருவதாகவும் மேலும் இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அஜித் நடிக்கவுள்ள 57வது படத்தில் 3 கதாநாயகிகள் என்று செய்தி வெளிவந்துள்ள நிலையில் அவற்றி ஒரு கதாநாயகியாக தன்ஷிகாவை புக் செய்து அவரது ஆசையை சிறுத்தை சிவா நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply