shadow

‘சாமி 2’ படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

விக்ரம் தற்போது துருவநட்சத்திரம் மற்றும் ஸ்கெட்ச் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்த பின்னர் அவர் ஹரியின் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘சாமி 2’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக தேவிஸ்ரீ பிரசாத் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பாளர் சிபுதமீன்ஸ் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

விக்ரமுக்கு ஜோடியாக முதன்முறையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். மேலும் முதல் பாகத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த த்ரிஷா இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply