shadow

dettolஅளவுக்கு அதிகமான அளவு ரசாயன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்ட மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளுக்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டதை அடுத்து தற்போது, ‘டெட்டால் குளியல் சோப்’ குறைந்த தரத்துடன் இருப்பதாக ஆய்வக சோதனையில் கண்டறியப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

100% பாதுகாப்பான சோப் என விளம்பரப்படுத்தப்படும்  “டெட்டால் குளியல் சோப்” குறைந்த தரத்துடன் இருப்பதாக சமீபத்தில் அந்த சோப்பை ஆய்வு செய்த எப்.டி.ஏ. என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. லக்னோவில் உள்ள இந்த அமைப்பு டெட்டால் நிறுவனத்தின் அனைத்து வகை சோப்புகளையும் முழுவதும் பரிசோதனை செய்து விரைவில் அறிக்கை அளிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த தரத்துடன் உற்பத்தி செய்துவிட்டு பொதுமக்களிடம் போலியான விளம்பரம் செய்துள்ளதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளதால் டெட்டால் சோப் மீது விரைவில் அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்த தரத்துடன் டெட்டால் சோப் உள்ளதாக ஆய்வு அறிக்கை வெளியானதை அடுத்து டெட்டால் சோப்பின் விற்பனை பாதிக்கப்படுமா? என்பது இனிவரும் காலங்களில்தான் தெரியவரும்.

Leave a Reply