shadow

டெல்லி ஏடிஎம் வாசலில் நின்ற பொதுமக்களிடம் குறைகளை கேட்ட ராகுல்காந்தி
rahul-gandhi
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு வரிசையில் நின்று ரூ.4000 ஏடிஎம்.இல் எடுத்து பொதுமக்களிடம் குறைகேட்டு பரபரப்பை ஏற்படுத்திய காங்கிரஸ் துணைத்தலைவர்ராகுல்காந்தி இன்று மீண்டும் தலைநகர் புதுடெல்லியில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க நின்ற பொதுமக்களை சந்தித்து அவர்கலிடம் குறைகளை கேட்டறிந்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

பாரத பிரதமர் நரேந்திரமோடி கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த 8ஆம் தேதி ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். இந்த் அறிவிப்புக்கு பின்னர் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்கள் உள்ளிட்ட  இடங்களில் பழைய நோட்டுகளை கொடுத்து புதிய ரூ.2,000 மற்றும் ரூ.100 நோட்டுகளை பொதுமக்கள் வாங்கி வருகின்றனர்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் புதுடெல்லியில் உள்ள ஏடிஎம் வாயில்களில் பணம் எடுக்க நிற்கும் பொதுமக்களை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் சந்தித்தார். மேலும், பணம் எடுப்பதில், அவர்கள் சந்திக்கும் இடர்பாடுகள் உள்ளிட்டவைகளையும் அவர் கேட்டறிந்தார். இந்த பிரச்சனையை ராகுல்காந்தி இன்று பாராளுமன்றத்தில் எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply