shadow

கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்? மோடி

modiமத்திய அரசு அறிவித்த கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையை ஒருசில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன் என்பது குறித்து பிரதமர் மோடி விளக்கியுள்ளார்.

டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த அரசியலமைப்புச் சட்ட தினத்தில் பேசிய பிரதமர் பிரதமர் மோடி, ”ஒவ்வொரும் தங்களது பணத்தை செலவு செய்ய உரிமை படைத்தவர்கள். யாருடைய பணத்தையும் யாரும் எடுத்துச் செல்ல முடியாது. தற்போது செல்போன் தொழில்நுட்பம் வழியாகவும் பணத்தை மக்கள் செலுத்தலாம்.

உலகம் மாறிக் கொண்டு இருக்கிறது. நாமும் அதற்குத் தகுந்தவாறு மாற வேண்டும். பணத்தை கையில் வைத்துக் கொண்டு செலவழிக்கும் நிலைமை மாறி ஆன்-லைன் மூலம் செலுத்த வேண்டும். கருப்புப் பணத்தை ஒழிப்பதில் இந்திய குடிமக்கள் வீரர்களாக இருந்து வருகின்றனர். அவர்களது சட்டபூர்வ பணத்திற்கு அரசு முழு பாதுகாப்பு அளிக்கும்

ஒருசிலர் மத்திய அரசின் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை எதிர்த்து வருகின்றனர். இதற்கு காரணம் இந்த நடவடிக்கையை முன்பே அவர்களுக்கு தெரிவிக்கவில்லை என்பதுதான் அவர்களது கவலை. தங்களது கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றிக் கொள்ள முடியவில்லை என்பதுதான் அவர்களது கவலை எல்லாம். அதற்கான நேரம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதுதான் அவர்களது கோபம்.

அரசியலமைப்புச் சட்டத்தின் ஆன்மாவுடன் இணைந்து இருக்க வேண்டும் என்பது முக்கியமானது. நாம் ஜனவரி 26ஆம் தேதியை கொண்டாடி வருகிறோம். ஆனால், நவம்பர் 25ஆம் தேதி இல்லாமல் ஜனவரி 26ஆம் தேதி பூர்த்தியாவதில்லை”

இவ்வாறு பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Leave a Reply