shadow

செல்லாத நோட்டுக்களை மாற்றிக்கொள்ள மீண்டும் ஒரு சான்ஸ். ரிசர்வ் வங்கி ஆலோசனை

கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி மத்திய அரசு ரூ.500, ரூ,.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தது. பொதுமக்களிடம் உள்ள இந்த நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள டிசம்பர் 30 வரை காலக்கெடு கொடுக்கப்பட்டது. காலக்கெடுவுக்கு மேல் செல்லாத நோட்டு வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் செல்லாத நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு மேலும் ஒரு வாய்ப்பு தர ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி மத்திய அரசிடமும், பல்வேறு தரப்பில் இருந்தும் ஆலோசித்து வருவதாகவும், பெரும்பான்மையோர்களின் கோரிக்கைக்கு இணங்கி மீண்டும் ஒரு வாய்ப்பு தரலாமா என, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறாது. இதன்படி, ஒரு குறிப்பிட்ட மதிப்பிலான அளவுக்கு, பழைய நோட்டுகளை டெபாசிட் செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply