shadow

இந்தியாவை அடுத்து இங்கிலாதிலும் டிமானிட்டிசேஷன். ஒரு பவுண்ட் நாணயங்கள் செல்லாது என அறிவிப்பு

ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று இந்தியா அறிவித்த பின்னர் வெனிசுலா நாடும் தங்கள் நாட்டின் உயர் மதிப்பு கரன்சி செல்லாது என்று அறிவித்தது. ஆனாலும் அந்நாடு பழைய நோட்டுக்களை மாற்றி கொள்ள அவகாசம் கொடுத்துள்ளது.

இந்நிலையில் இந்தியா, வெனிசுலாவை அடுட்த்ஹு இங்கிலாந்து நாடும் 33 மில்லியன் மதிப்பிலான 1 பவுண்ட் நாணயங்கள் செல்லாது என தற்போது அறிவித்துள்ளது. ஆனால் பழைய நாணயங்களை வரும் அக்டோபர் மாதம் 15ம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து புதிய நாணயங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அந்நாடு காலக்கெடு விதித்துள்ளது.

போலி நாணயங்களை புழக்கத்தில் இருந்து ஒழிக்கவே, தற்போது புழக்கத்தில் உள்ள 433 மில்லியன் மதிப்பிலான 1 பவுண்ட் நாணயங்கள் செல்லாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதாகவும், ஆனால் இந்தியாவை போல தடாலடி அறிவிப்பாக இல்லாமல் பழைய நாணயங்களை மாற்றி கொள்ள அக்டோபர் மாதம் வரை என நீண்ட கால அளவு கொடுத்துள்ளது.

மேலும் பழைய ஒரு பவுண்ட் நாணயங்களுக்கு பதிலாக புதிய ஒரு பவுண்ட் நாணயங்களை விரைவில் வெளியிட உள்ளதாகவும் இங்கிலாந்து அறிவித்துள்ளது.

Leave a Reply