உடல்நலக்குறைவு, வசிக்க முடியாத அளவிற்கு உலகின் மிக அதிகளவு மாசுபட்ட நகரமாக துரதிஷ்டவசமாக இந்திய தலைநகர் டெல்லி தேர்வாகியுள்ளது.

யேல் பல்கலைக்கழகம் கடந்த சில நாட்களாக உலகின் 178 நாடுகளுக்கு பயணம் செய்து உலகின் மிக அதிகமாக உள்ள மாசுபட்ட பிரபல நகரங்கள் குறித்து ஒரு ஆய்வு எடுத்தது. அதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் உலகின் மிக அதிக மாசுபட்ட நகரமாக இந்திய தலைநகர் டெல்லி முதலிடத்தில் உள்ளது. இந்த இடத்தில் இதுவரை சீனாவின் பீஜிங் நகரம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியில் உள்ள காற்றை மாசுபடுத்துவதில் இந்தியா 174 இடத்தில் உள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை தலைவர் சுனிதா நரேன் ” இந்த விவகாரத்தில் சீனாவை நாம் பின்னுக்கு தள்ளியது துரதிருஷ்டவசமானது என்றும் இதில் குறிப்பிடத்தக்க வேறுபாடு என்னவென்றால் சீனா காற்று மாசுபடுவதை குறைக்க துரித நடவடிக்கை எடுத்து வருவதால் அங்கு சற்று சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்

இந்த ஆய்வை மனதில் வைத்துக்கொண்டு சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *