shadow

டெல்லி போராட்டத்தின்போது துப்பாக்கியை காட்டியவர் கைது!

டெல்லி கலவரத்தின்போது போலீசாரை துப்பாக்கி காட்டி மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த வாரம் போராட்டம் நடைபெற்ற போது திடீரென கலவரம் எடித்தது. இந்த கலவரத்தின்போது, போலீஸை துப்பாக்கி காட்டி ஒரு நபர் மிரட்டிய புகைபப்டம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது

இதனையடுத்து அந்த நபரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் இருந்த நிலையில் அந்த நபர் தலைமறைவானதாக கூறப்பட்டது. இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் பதுங்கியிருந்த அவர் கைது செய்யப்பட்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் அந்த நபரின் பெயர் ஷாருக் என்றும் தெரிய வந்துள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *