shadow

download (8)

மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் செயல்படும் டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேசன் (டி.எம்.ஆர்.சி.) நிறுவனம், உதவி மேலாளர்(நிதி), ஸ்டேஷன் கண்ட்ரோலர்/டிரெயின் ஆபரேட்டர், ஜூனியர் எஞ்சினியர், அக்கவுன்ட் அசிஸ்டென்ட் உள்ளிட்ட 1509 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ. படித்தவர்கள் உதவி மேலாளர் பணிக்கும், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல் டிப்ளமோ எஞ்சினியர்கள் ஸ்டேஷன் கன்ட்ரோலர்/டிரெயின் ஆபரேட்டர், ஜூனியர் எஞ்சினியர் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

கஸ்டமர் ரிலேஷன்ஸ் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு இளங்கலை பட்டதாரிகளும் இதர பணிகளுக்கு ஐ.டி.ஐ. படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது:

பணிக்குத் தக்கவாறு, 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களே விண்ணப்பிக்க முடியும்.

எழுத்துத் தேர்வு, நேர்காணல், மருத்துவ பரிசோதனை, திறமைத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

www.delhimetrorail.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 25.11.2015.

கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தைப் பார்க்கலாம்.  

 

Leave a Reply