shadow

chaudalaஹரியானா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த ஆசிரியர் நியமனத்தில் பெரும் ஊழல் நடந்ததாகவும் அந்த ஊழலில், முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலாவும் அவரது மகன் அஜய் சிங் சவுதாலாவும் உடந்தை என்று சமீபத்தில் ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, மற்றும் அஜசிங் உள்ளிட்ட 55 பேருக்கு கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனை சரியே என்று இன்று டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் கடந்த 2000-மாவது ஆண்டில் முதலமைச்சராக ஓம் பிரகாஷ் சவுதாலா பதவி வகித்த போது, 3.206 இளநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பான வழக்கில், சவுதாலா அவரது மகன் அஜய் சிங் சவுதாலா மற்றும் எட்டு பேருக்கு பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 44 பேருக்கு நான்கு ஆண்டுகளும், ஒருவருக்கு ஐந்தாண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Leave a Reply