shadow

டெல்லி முதல்வர் வீட்டின் மின் கட்டணம் ரூ.1 லட்சமா? பொதுமக்கள் அதிர்ச்சி

aravindடெல்லி சட்டசபை தேர்தலின்போது ‘நான் ஒரு சாதாரண மனிதன். எளிய வாழ்க்கை வாழ்பவன். முதல்வரானாலும் சைரன் காரை பயன்படுத்தாமல் எளிய வாழ்க்கையையே தொடருவேன் என்று மக்களை கவரும் வகையில் பேசி ஆட்சிக்கு வந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் சாயம் தற்போது வெளுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அவர் வசிக்கும் வீட்டிற்கு ஒரு மாதத்திற்கு ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் மின் கட்டணம் வந்துள்ளதாக தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தற்போது தெரிய வந்துள்ளது. இதனால் டெல்லி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரபல வழக்கறிஞரும் தகவல் உரிமைச் சட்ட ஆர்வலருமான விவேக் கார்க் எழுப்பிய கேள்விக்கு பதிலாக இத்தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா செய்தியாளர்களிடம் கூறும்போது, “கெஜ்ரிவால் வீட்டு 2 மாத மின் கட்டணம் சுமார் ரூ.1 லட்சம் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் தன்னை சாதாரண மனிதன் என்று அடையாளம் காட்டி கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் தான் ஒன்று சாதாரண மனிதன் இல்லை, விவிஐபி ஆக மாறிவிட்டவர் என்ற உண்மையை தற்போது அவர் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்” என்று கூறியுள்ளார்.

ஆனால் முதல்வர் அலுவலகம் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. நேற்று டெல்லி அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “டெல்லி சிவில் லைன்ஸ் பகுதியில் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பார்வையாளர்களுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த வீட்டின் மின்சாரக் கட்டணம் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் முறையே ரூ.17,000, ரூ.7,370, ரூ.22,690 என வந்துள்ளது.

இந்த வீட்டின் ஒரு பகுதியை முதல்வரின் தனி வசிப்பிடமாகக் கருதி தனி மின் இணைப்பு தரப்பட்டுள்ளது.

இதற்கான மின்சாரக் கட்டணம் மார்ச், ஏப்ரல் மாதங்களில் முறையே ரூ.15,175, ரூ.48,630 ஆக வந்துள்ளது. மே மாதக் கட்டணம் இன்னும் செலுத்தப்படவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply