shadow

11டெல்லி மற்றும் டேராடூன் மண்டல சி.பி.எஸ்.இ. பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மகள் ஹரிஷிதா 96 சதவிகிடஹ் மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தனது பாராடுக்களை தெரிவித்துள்ளார்.

டெல்லி மற்றும் டேராடூன் மண்டல சி.பி.எஸ்.இ. பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணியளவில் வெளியானது. இதில் வழக்கம்போல மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். டெல்லியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 0.76சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு 82.10 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 82.86 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த தேர்வில் மாணவர்கள் 78.27 சதவீதமும், மாணவிகள் 88.52 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

டெல்லியில் சார்தாக் அகர்வால் என்ற மாணவி 99.6 சதவீத மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

Leave a Reply