டெல்லி சட்டமன்ற தேர்தல்: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்

டெல்லி சட்டமன்றத்திற்கு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அங்கு பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நடைபெறவுள்ளது

இந்த நிலையில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இந்த வேட்பாளர் பட்டியலில் 57 இடங்களுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. இதில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த கபில் மிஸ்ரா மாடல் டவுன் தொகுதியில் போட்டியிட உள்ளார். அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது

Leave a Reply