shadow

34 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அதிர்ச்சி தோல்வி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை அணி ஏற்கனவே அடுத்த சுற்றான பிளே ஆஃப் சுற்றுக்க்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் நேற்று டெல்லி அணியுடன் மோதியது. இந்த போட்டியிலும் சென்னை வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னை அணிக்கு டெல்லி அணி அதிர்ச்சி கொடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் முதல் இடத்தை பிடிக்கும் வாய்ப்பை சென்னை இழந்தது. டெல்லி அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றபோதிலும், அந்த அணிக்கு அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மற்றும் டெல்லி அணி போட்டியின் ஸ்கோர் விபரம்:

டெல்லி அணி: 162/5 20 ஓவர்கள்

ஆர்.ஆர்.பேண்ட்: 38 ரன்கள்
விஜய்சங்கர்: 36 ரன்கள்
ஹர்ஷல் பட்டேல்: 36 ரன்கள்

சென்னை அணி: 128/6 20 ஓவர்கள்

ராயுடு: 50 ரன்கள்
ஜடேஜா: 27 ரன்கள்

ஆட்டநாயகன்: ஹர்ஷன் பட்டேல்

Leave a Reply