ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடர்: ஐதராபாத் மற்றும் டெல்லி அணிகள் வெற்றி

Kolkata Knight Riders player Robin Uthappa plays a shot during match 24 of the Vivo Indian Premier League ( IPL ) 2016 between the Mumbai Indians and the Kolkata Knight Riders held at the Wankhede Stadium in Mumbai on the 28th April 2016 Photo by Vipin Pawar / IPL/ SPORTZPICS

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஐதராபாத் மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன.

டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் டெல்லி அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. இதனால் முதலில் களத்தில் இறங்கிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 186 ரன்கள் எடுத்தது. கே.கே.நாயர் 68 ரன்களும், பில்லிங்ஸ் 54 ரன்களும் எடுத்தனர்.

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி, 18.3 ஓவர்களில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அந்த அணியின் ராபின் உத்தப்பா 72 ரன்கள் எடுத்தார்.

ஐதராபாத் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மற்றொரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 194 ரன்கள் எடுத்தது. கேப்டன் வார்னர் 92 ரன்களும், வில்லியம்சன் 50 ரன்களும் எடுத்தனர்.

195 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இன்று குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கும், புனே மற்றும் மும்பை அணிகளுக்கும் இடையே போட்டிகள் நடைபெறவுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *